ஹைக்கூ - கிராமிய வாழ்வியல்
#1. காட்டுப்பக்கம் போக
நடுங்குது உசுரு
மனித மிருகங்கள்
#2. கண்டாங்கிச்
சேலை வியப்பு
இரவு ஆடை இளசுகள்
# 3. ஆத்தோரம்
சலசலப்பு
மணல் வண்டி வரிசை
# 4. கரிசல் காட்டில்
கைகலப்பு
கைப்பேசிக் களவு
# 5. கயல்விழி
கடுகடுத்தாள்
கருவாடு விற்கவில்லை
# 6. முறை மாமன்
பரிசத்துக்கு பரிசளித்தான்
வலைத்தொடர்பு சாதனம்
#7. சின்னானோட
வண்ணப் பொட்டுக் கடையிலே
மின்னும் கைப்பேசி உறை
#8. காணொளியில்லா
பேருந்து காத்தாடுது
காராயிப்பட்டியிலே
# 9. ஆராயிக் கெழவிக்கு
தீராதாக் கோவம்
நாடகத்து நடுவுல மின்வெட்டு
#. 10. சிறுதானியம் ..சிறுகுறிப்பு எழுது
பட்டணத்து பள்ளியில் பண்ணையார்ப்
பேரன் ..பதில் தெரியாமல் ..
# 11. மல்லிகைத் தோட்டத்தில்
மயக்கும் மணம்
பூச்சி கொல்லி மருந்து
#12. கம்பி வேலிகளுக்குள்
எம்பிப் பார்க்கும்
மனை விற்பனைப் பலகைகள்..
# 13. காலையில் கதிரறுப்பு ..
மாலையில் மனைத் திறப்பு
சாலையோரத் தோரணங்கள்
# 14. கோயில் திருவிழா
கையில் குப்பி நிறைத்த
மிளகு உப்பிட்ட சோளம்
# 15. கம்பு சோளம் தினை
வரகு கேப்பை சாமை
புதிர் போட்டிச் சொற்கள்