பொம்மை
சந்தை சரக்கனைத்தும்
இம்மண்ணில் செய்த
பொம்மைகளே
வண்ணங்கள் பலவாக
ஆண் உருவாக
பெண் உருவுமாக
தன் வழி அவனிழுக்க
தன் வசம் அவள் வளைக்க
பொம்மைகளிரண்டும்
தெளிவின்றி வழியெல்லாம்
புழுதியில் புரண்டு
விழுப்புண்கள் ஏராளம்
பொழுதடைந்து போகையிலே
நல்லறிவு நவின்றது :
எல்லோரும் ஒரே மண்ணென்று !
மார்ச் மாத உலகளாவிய குறும்பா போட்டி # 5 (நிலா முற்றம்)2017
No comments:
Post a Comment