உள்ளத்தில் பூக்காதோ அன்பு...
ஆதிமனிதன் அன்பு
மீதி மனிதன் வந்தான்.
அன்பிலார் என்பதோர் மாயை .
அன்புசால் மாந்தர் தம் போர்வை
மெல்லினத்தார் பிறர் சொல்லிழுக்கால்
இடையறாதின்னலுற்று
வல்லினமாய் வார்ப்பாகும் கோர்வை.
உளத்திலாகும்...உள் ஊமைக்காயங்கள்
உள்ளன்பு பூசிக்கொள்ளும் சில சாயங்கள்.
உலர்ந்த வெறுப்பென்பதோ மாயங்கள்.
அனிச்சம் காக்க வரும் அனிச்சைகள்.
அன்பின் பழக்கமாய் ….
வம்புகள் வழக்கமாய் வர
தெம்பிழந்த கூட்டம் செய்ததோர் முகமூடி
அன்பிலா முகம்.
கொம்பிழந்த காளையாய்
எம்பி எம்பித் தோற்று ..வந்ததிந்த
மாற்றம்…. முக வாட்டம்..
அன்பிலாத் தோற்றம்..
மணம் வீசும் அன்புக்கிங்கு ஏற்றம் - மும்
மலமாம் ஆணவ கன்ம மாயைத் தாக்கம் .
‘தன்னலம்’ என்றும் வீசும் நாற்றம் - மனப்
பள்ளத்தில் பூத்திருக்கு அன்பு
கள்ளம் கசடகற்ற
வெள்ளம் போல்
துள்ளி குதிக்குதிங்கே(கண்ணதாசன் சான்றிதழுக்கான தினக்கவிதை # 20 (01-09-2016 ))
No comments:
Post a Comment