கவியுலகப் பூஞ்சோலை மேதகு கலாம் நினைவு நாள் கவிதைப் போட்டி - 2016
ஆசானுக்கு உயர்வு செய்ய
பேசாமல் செயலாற்றிடுவோம் ..
கூசாமல் கூத்தடிக்கும் கும்பல் நீக்கி
தேசத்திற்கு தொண்டாற்றிடுவோம் ..- கலாம்
நேசத்தை நெஞ்சில் நிறுத்திடுவோம் ..
நாம் பிறந்த சிற்றூரின் அரசு
ஆரம்பப் பள்ளிகளில்
ஓரம் கட்டிய பிள்ளைகளுக்கு
நேரம் ஒதுக்கி ..நல்
சிறுவர் நூல்களை
தருவித்து தானமாய் தந்திடுவோம் ….
அறிவியலும் வரலாறும் ….
சிறு மூளைக்குள் சுவைக்
சிறுகதைகளாய் ..புகுத்திடுவோம்..
பெரிதாய் வளர்ந்த நாடுகள்
பெருமையாய் செய்யும் சேவையிது ..
ஊருக்கு சிலரேனும் செய்திட்டாலும்
நூறுக்கு மேற்பட்டக் குழந்தைகள்
பேர் சொல்ல விளங்கிடுமே..
சிறுதுளிதானே பெரு வெள்ளமாகும் …
ஊருக்கு நூறென்றால்
பெரு மாநிலத்தில் பல்கி
பெருகாதோ ..லட்சங்களாய் ..
சீர்மிகு பாரதம் சிறந்திடுமே .
பாரரங்கில் பட்டொளி வீசி ..
அய்யன் கலாமின் ..கனவுகள்
மெய்ப்படும் நாள் நம் கைகளிலே ..
கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
No comments:
Post a Comment