ஹைக்கூ (பட்டங்கள் )
இன்று வெற்றி பெற்ற ஹைக்கூ
( கவியுலக பூஞ்சோலையில்)
#1
நூலறுந்த பட்டங்கள்
பறக்க முடியாமல் திணறுது
பொறியியல் கல்வி
#2
வானம் எட்டி விடும்
எங்கள் கல்லூரி பட்டங்கள்
கானல் நீர்
#3
வானம் வசமாக்க துடிக்கும்
பட்டம் தரையில் புரண்டு சிரிக்குது
நூல்கண்டு
#4
பட்டம் மேலே மேலே போகுது
நூல்கண்டு இளைத்துக் கொண்டே
பெற்றோர்.
#5
அடங்காத ஆட்டம்
அடக்கும் நூல்கண்டு
தாலி
No comments:
Post a Comment