Thursday, May 4, 2017

அன்னையர் தினத்தன்று 2016

வேள்வி காத்தது தாய்
விடையாய் பூத்தது  சேய்

வேள்வியில் ஆணென்ன பெண்ணென்ன
கேள்வியில் கிளர்ந்தது சிந்தை

ஆணுருவில் அன்னையுண்டு.

பெயரிலிவன் தந்தை

உயிரிலிவன் சிந்தை.

தாயானவருக்கு தலைவணக்கம்.
தாயுமானவருக்கு சிலை வணக்கம்.

தாய் வேறு தாய்மை வேறன்றோ?

ஆணென்ன ?
பெண்ணென்ன?
பெற்றவள் என்ன? -சேய் கிடைக்கப்
பெற்றவள் என்ன?

பெற்றவள் ...
பேறு பெற்றவள்..
மகப்பேறு பெற்றவள்.

மகவு ..
கிடைக்கப் பெற்றவள் ..
மகா பேறு பெற்றவள்.

தாய்மை உருவல்ல..உணர்வு.
தாய்மைக்கு பேதமுண்டோ?

அன்னையர் தினத்தன்று
முன்னைய சிந்தைகள் மாற்றி
பற்பல விந்தைகள் செய்திடுவோம்.

உருவில் தாய்
உணர்வில் பேய் - எனக்
கண்டதுண்டு உலகில் நாம்.

உருவில்   சிறு தங்கை
உணர்வில் திருநங்கை -தாயாய்
செய்வார் இவர் பங்கை.
பாரினில் நாம் பார்த்ததுண்டே.

தாய் வேறு தாய்மை வேறன்றோ?

தாய்மை உருவல்ல..உணர்வு.

தாயுள்ளம் கொண்ட ...

தந்தைக்கு..
தனயனுக்கு...
தமக்கைக்கு...
தமையனுக்கு..
மங்கைக்கு..- திரு
நங்கைக்கு..- நம்
பங்கை பகிருவோம் அன்பாக.

ஓர் வயிற்றில் பிறந்து..
ஓராயிரம் வயிறு குளிர வைப்போம்..

தாய்மைக்கு பேதமுண்டோ?

அன்னையர் தினத்தன்று
முன்னைய சிந்தைகள் மாற்றி
பற்பல விந்தைகள் செய்திடுவோம்.

தாய்மை ததும்பும் தாயுள்ளங்கள்
தழைக்கட்டும் தரணியிலே.    

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...