தமிழ் பட்டறை குழுமம்
********************************************
ஐக்கூ வகைமை கவிதைப் போட்டி
28.11.16 முதல் 30.11.16 வரை
******************************************************
#1
நேற்றிரவு கொட்டியது வானம்
காலையில் எட்டிப் பார்த்தது குடையொன்று
# காளான்
#2
குத்திட்ட நேர் கொண்ட பார்வை
சீரறிவின் அடையாளமாய் குறுந்தாடி
# மலையாடு.
# 3
நீருண்ட மேகம் கனமாய் பொழிய
தேனுண்ட வண்டாய் ..ஏப்பமிட்டது
# கடல்.
#4
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
மண்ணோடு மண்ணாக்க பெரு முயற்சி
# பூச்சிக்கொல்லி.
#5
ஜல்லிக்கட்டை தள்ளி வைக்க தடபுடலாய்
மேலை நாட்டு மாநாட்டு விருந்து பல்லிடுக்கில்
# மாட்டிறைச்சி.
# 6
கரும்பச்சை ஊசியிலை காட்டினிலே ஊடாடும்
இளஞ்சிவப்பில் நேர்த்தியான நெசவு
# இலையுதிர்க்காலம் .
கவிதை ஆக்கம்: ராஜி வாஞ்சி
No comments:
Post a Comment