Thursday, May 4, 2017

சிலகாலம் தாண்டி வந்தா செலையாத் தான் பார்ப்ப என்னை

தமிழமுது கவிச்சாரல் கவிதை ( 02-09-2016)

சான்றிதழ் இல்லாக் கவிதை

பெண் :

களவாண்டுப் போனானே ..
நெல மாறிப் போனேனே - எம்மனச

களவாண்டுப் போனானே ..
நெல மாறிப் போனேனே…

பல வேல பாத்துப்புட்டு ..
மலநாட்டு மங்கை என்னை
செல போல தூக்கிப் போக
கலங்காம வருவான்னு ..
விளங்காம நிக்குறேனே
சலங்கப் போட்டச் சின்னப்பொண்ணு

ஆண் :
புலம்பாதே என்..புது நெல்லு நாத்தே
கிளம்பித் தான் நானும் வாரேன்
தளும்பித் தான் அழுவாத..- என்
அலங்காரம் செஞ்ச அம்மஞ்செலயே



பெண் :
நீ வார நேரத்துல ..
நான் பித்தாகிப் போவேனோ ..
நாலும் தெரியாம ..
காலும் புரியாம ..
ஓட்டக் கொடம் எடுத்து ..
ஓடப்பக்கம் நானும் வந்தேன் ..
வாட்டமா ..எடுத்த..தண்ணி ..
ஓட்டமா ..ஓடுதய்யா ..ஆத்தோட..

வாசலுக்கு வந்தேனே காத்தாட ..
பாச மச்சான் நீ வார அழகப் பாக்க
தீசலாப் போச்சுதய்யா சாப்பாடு ..

ஆண்:
பாசமாய் நானும் வாரேன்..என்
ஆச ரோசாவே ..என்னை ..
பேசிப் பேசிக் கொல்லாதடி ..
மோசமா நோகுதடி  மனசுக்குள்ளாற

பெண் :
சுருக்க நீ வரும் பாதை …
மறுக்க பாக்க எண்ணி ..
கருக்கலுள காத்திருக்கேன் ..
கருப்பன் கோயில் வாசலிலே …

மிளகுக் காடு போன மச்சான்
இலவுக் காத்தக் கிளியானேன் ..
களவாணி நீயும் இப்ப
சிலகாலம் தாண்டி வந்தா
செலையாத் தான் பார்ப்ப என்னை
வெளையாட்டு இல்லை மச்சான்
மலையாத்தா வாக்காத்தான் ..
நிலையாத்தான் நான் சொல்லிப்புட்டேன் .

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
குறிப்பு : அம்மஞ்செலயே - அம்மன் சிலையே

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...