கண்டாயோ கண்ணாலே
கண்டவர் விண்டதை
விண்டு சொன்னாயோ எம்மிடம்
கண்டவர் சொன்னதை
விண்டிருந்தால் கண்ணால்
கண்டவரை யாம்
கண்டிடல் வேண்டும் இன்றே
வெண்டாமரைக் கொம்பு களிறு
மொண்டாடும் சோணையாறு
கொண்ட நல்லூரைக்
கொண்டிடுவாய் பரிசாக …
கண்டவர் விண்டதை
விண்டு சொன்னாயோ எம்மிடம்
கண்டவர் சொன்னதை
விண்டிருந்தால் கண்ணால்
கண்டவரை யாம்
கண்டிடல் வேண்டும் இன்றே
வெண்டாமரைக் கொம்பு களிறு
மொண்டாடும் சோணையாறு
கொண்ட நல்லூரைக்
கொண்டிடுவாய் பரிசாக …
“நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ “குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
எழுதியவர்: படுமரத்து மோசிகீரனார்
சூழல்:
தலைவன் வருகிறான் என்று பாணன் சொன்னதை நம்ப முடியாமல், ”நீ கண்டனையோ?, கண்டார்க் கேட்டனையோ?,யார்வாய்க் கேட்டனையோ? ” என்று கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறாள். நாங்கள் உண்மையை அறிய விரும்புகிறோம். நீ சொல்வாயாக;சொன்னால், வெண்மையான கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் மூழ்கி விளையாடும், பொன்மிகுந்த பாடலிபுத்திர நகரத்தைப் பெறுவாயாக.

#75.குறுந்தொகை
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.
நன்றி : முனைவர். பிரபாகரன்
Nallakurunthogai.blogspot.com
Nallakurunthogai.blogspot.com
No comments:
Post a Comment