Tuesday, May 9, 2017

பிரியா நண்பினர் ..#302.குறுந்தொகை

பிரியா நண்பினர்
அரிய இருவரும் எனும்
அலருக்கஞ்சி மனம்
உலர்ந்தானோ
களர் மலை நாட்டினன்


தளர் வளை தவிக்கக்  கண்டோம்
வளர் உயிர் உருக நின்றோம்


பலர் உறங்கும் நடு
யாமத்தில் என் நினைவில்
சாமந்தியாய் பூக்கிறானே


அய்யோ என் தோழி
செய்வதறியேன் ..செவ்விழி
காண வாரானோ - என்னுயிர்
பேண வாரானோ ?


உரைத்திசின் தோழியது “ என்ற 302 ஆவது குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


பாடியவர்: மாங்குடி கிழார்


தலைவனின் பிரிவினால் உண்டாகிய துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறந்து போகலாம் என்றால், அதற்கும் அச்சமாக இருக்கிறது. ஊரார் எங்கள் இருவரையும் பற்றிப் பழிச்சொற்கள் பேசுவதால், தலைவன் என்னை நேரில் காண வருவதற்கு அஞ்சுகிறான் என்று நினைக்கிறேன். அவன் என் நினைவிலே மட்டும் வருகிறான்.” என்று தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.


#302.குறுந்தொகை
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்றலைப்
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே.
திணை: குறிஞ்சி.


நன்றி:முனைவர்.பிரபாகரன்

nallakurunthogai.blogspot.com

விடுதியில் இருக்கும் மகனுக்கு

விடுதியில் இருக்கும் மகனுக்கு
சடுதியாய் சமைத்து பகலில்
நெடுந்தூரம் போய் கல்லூரியை
தொடும் தூரத்தில் நீண்ட
வரிசையில் வண்டிகள்
பொறித்த கறிகாய்கள்
வறுத்த அரிசி வகை
பிரியாணியாய் வாசனை நமக்கு
புரியாத பெயர்களிலே..
அறியாத உணவு வகைகள் …

வடிவமில்லா அன்பிற்கு
வடிவான வாசம்
உண்டென கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்

வண்டிகளின் வரிசை காத்திருப்பில் -கற்
கண்டின் சுவை கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்

அந்தி நேர வானவில்....

அந்தி நேர வானவில்.....
முந்தி முந்தி வருகையிலே மனம்
பிந்தி பிந்தி ஓடுதடி என் சகியே
விந்தி விந்தி வாடுதடி என் சகியே


சந்திரன் போல் மதி கொண்டான்
இந்திரனாய் மதி வென்றான்
வந்திடுவேன் விரைந்தென்றான்
சிந்தும் மழைக்  காலம் வருமுன்னே
எந்திரமாய் எந்நாளும் ஆனதுவே
தந்திரமாய் என் செய்தான்
மந்திரங்கள் இதற்கு உண்டோ
மங்கை நீ செப்பிடுவாய்

அங்குமிங்கும் அலைந்து
திரியும் ஆனந்த மேகம் கண்டு
சிரிக்கும் சிறகடிக்கும் நல்
ஊரினிலே நான் மட்டும்
வேரினிலே விலகாத பயம் கொண்டு
கார் முகில் கண்டு கலங்குவதேன்

ஊர் மகிழ மண்ணிற்கு மரத்திற்கு
வேர் நனைத்து சிலிர்ப்பூட்டும்
அறிவிப்பாய் அழகு வண்ண
அந்தி நேர வான்வில்லே ..
மன்னவனும் வந்திடுவான்
மழை முகிலின் துணையோடு
என்றே நீ செப்பிடுவாய்
முன்றில் வந்து முதல்
துளியை முத்தாய்ப்பாய்
நான் பெறுவேன்...

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...