Monday, May 1, 2017

கடைமடை காட்டினிலே

கடைமடை காட்டினிலே
இடைவிடா முப்போகமுண்டாம்
மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று
யானை கட்டி போரடித்து சோறுடைத்த
சோழ நாட்டினிலே வீரமிகு
வேழமென விண்ணுயர்ந்த வேளாண்
கூட்டமதை வெறும் புழுதியாக்கி
நாட்டின் கடைக்கோடியாக்கியதும்
கதி கெட்டு ..உழவனின்று
விதி வென்று மதி நொந்ததுவோ?
ஏரிகள் பெருக்கி நீரினை உயர்த்தி
சேரிகளும் செழிக்க செய்த வள்ளல்
ஓரிகளும் பாரிகளும் தோற்றதுண்டோ ?
வாரியனைத்தையும் சுருட்டும் உலக
வாணிப கலாச்சாரத்திற்கு ரத்த
காணிக்கையானதோ
மாணிக்கமாம் இயற்கை வேளாண்மை
களை நீக்கியால் கசடாக்கினர்
 தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை
குறிப்பு :
கடைமடை காட்டினிலே
இடைவிடா முப்போகமுண்டாம் - காவிரி டெல்டா பகுதி என்பது கடைமடை பகுதியாகும். வளம் மிக்க அப்பகுதியில் முப்போகம் விளையும். (சம்பா, தாளடி,குருவை) அங்கு தான் மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று யானை கட்டி போரடித்ததாக பாடல் குறிப்பு கூறுகிறது.

உயர் மலை உச்சியிலே..குறுந்தொகை#60

உயர் மலை
உச்சியிலே ….குறுகிய
*கூதளம் …
கூத்தாடுகையில்
உடன் ஆடும்
உவப்பு தேனடை கண்டு
உள்ளம் துள்ள ..குடையாக
உள்ளங்கைக்  குவித்து ..
ஊறும் தேனை ..உறிஞ்சாது ..
நாவில் சுவைக்கும் முடவன்
அடியெடுத்து ..நடவாது - மலை
அடிவாரமிருந்து
தேன் சுவை கண்ட
மான் ஆகிவிட்டாலே போதுமடி ….


*கூதளம்  - கூதளஞ்செடி


குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்” என்ற குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.


பாடியவர்: பரணர்


பாடலின் பின்னணி: தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்.  அதுவே எனக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.


நன்றி: முனைவர்: பிரபாகரன் (பொழிப்புரை)
Nallakurunthogai.blogspot.com


#Rajikavithaigal


#60 குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்

பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...