உயர் மலை
உச்சியிலே ….குறுகிய
*கூதளம் …
கூத்தாடுகையில்
உடன் ஆடும்
உவப்பு தேனடை கண்டு
உள்ளம் துள்ள ..குடையாக
உள்ளங்கைக் குவித்து ..
ஊறும் தேனை ..உறிஞ்சாது ..
நாவில் சுவைக்கும் முடவன்
அடியெடுத்து ..நடவாது - மலை
அடிவாரமிருந்து
தேன் சுவை கண்ட
மான் ஆகிவிட்டாலே போதுமடி ….
*கூதளம் - கூதளஞ்செடி
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்” என்ற குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: பரணர்
பாடலின் பின்னணி: தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். அதுவே எனக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.
நன்றி: முனைவர்: பிரபாகரன் (பொழிப்புரை)
Nallakurunthogai.blogspot.com
#Rajikavithaigal
#60 குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
No comments:
Post a Comment