அகர வரிசை கவிதை...
அன்னப்பேடையவள் அன்றிலாகி
ஆருயிருமாகி ஆனந்த ஆட்சியிலே
இரு இன்னுயிர்கள் இன்னுமீருயிர்களை
ஈந்திங்கே ஈகையேற்று
உலகதிலே உயர்வாய் உலாவி - உள
ஊசலடக்கி ஊர் ஊனமகற்றி
என்பும் எனதல்ல என்றாகி
ஏற்றமிகு ஏரெனவே
ஐம்புலனை ஐக்கியமாக்கி ஐயனை
ஒன்றென ஒப்பமதில் ஒருமித்து
ஓங்கிவிடில்
ஒளவியமேன் ஒளடதமேன் ?
No comments:
Post a Comment