Thursday, May 4, 2017

சென்ரியு கவிதை - 21-10-2016

#தமிழமுது_கவிச்சாரல்_குழுமம்  21-10-16  #சென்ரியு கவிதை

#தலைப்பு_(நகைப்புக்குரியதாகும்) #நாகரீகம்



#1.)
இளைய சமுதாயத்தின்
மாதாந்திர பட்டியலில்
தலைச் சாயம்



#2.)
உச்சி முதல் கால்வரை
உலகத்தர பூச்சுக்கள்
மின்தூக்கியில் வியர்வை மயக்கம்




#3)
ஆடம்பர மாளிகையில்
நிம்மதியாய் தூக்கத்தில்
காவலாளி



#4)
சிரித்த முக
வரவேற்பாளர்
சிடுமூஞ்சி வீட்டில்



#5)
கல்யாணசாப்பாடு
வரவேற்பு விருந்தாச்சு
கடற்கரையில் ஓடுவோர் கூட்டம்



#6)
நீர் பங்கீடு
சமமாய் சரியாய்
சாராயக் கடையில்


#7)
ஓடும் மின் வண்டியில்
அடுப்பு கேட்டு பெண்கள்
போராட்டம்



#8)
பத்து வருட பரிதவிப்பில்
பிறந்த பிள்ளை
தவழுது பாலர் பள்ளியில்


#9)
அடையாளம் தேடி ..
ஆலாய் பறக்கின்றார்
முகத்தில் பல வண்ண முகமூடி



#10)
அடுக்குமாடி குடியிருப்பு
ஆயிரம் வாசல்
அதிசய அமைதி


#11)
அவசரத் தேவைக்கு
அணுக கதவில்லா
அடுத்த வீடு

#12)

ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் அன்றாடம்
நாட்டமில்லை வாழ்வில்


#13)
தலைக்கு மேல் தகவல்கள்
தாராள தொழில் நுட்பம்
மௌன மொழி வீட்டில்


ராஜி வாஞ்சி

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...