குறுந்தொகை #1
செங்காந்தள் கையேந்தி
செங்காந்தள் காணுகையில்
செங்காந்தள் வாடிடுமே
ஏந்திழையின் எழிற்கண்டு - மலை
வேந்தன் கண்மூடா கனவினிலே
மனம் கடுக
பாங்கி கண்டு
ஏங்கி நின்றான்.
தாங்கிய மலர் - நல்
நங்கையிடம் சேர்க்க
முன் கை நீள ..
சொன்னவள் சொல் கேளீரோ:
செங்களத்து மாந்தர் நாமே
செங்கோல் அம்புடைத்து
செங்கோட்டுக் களிறு கொண்டோம்
செங்கழலோன் குமரனவன்
செங்குன்றம் யாம் கொண்டோம்
செங்காந்தள் குன்று கொண்டோம்
செங்காந்தள் நன்று தந்தாய்
“செங்களம் படக்கொன்ற” என்ற #1 குறுந்தொகைப் பாடலை அடிப்டையாகக் கொண்டு எழுதப்பட்டது.
எழுதியவர்: திப்புத் தோளார்
தலைவன் மீது தலைவி கோபமாக இருக்கிறாள்- தலைவனை சந்திக்க தான் வராமல் தன் தோழியை தூது அனுப்புகிறாள்.தலைவிக்காக அவன் கொண்டுவந்த செங்காந்தள் பூக்களைத் தலைவியிடம் கொடுக்குமாறு தலைவன் வேண்டுகிறான். , ”எங்கள் நாட்டில் உள்ள குன்றுகளில் இது போன்ற பூக்கள் கொத்துகொத்தாக உள்ளன.” என்று கூறி, தலைவியின் கோபம் வெளிப்படுமாறு அவன் கொடுக்கும் பூக்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறாள் தோழி.
#1 செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
#Rajikavithaigal
நன்றி:முனைவர். பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
No comments:
Post a Comment