kurunthogai#19
#Rajikavithaigal
செவ்விய தமிழ் வளர்த்த
எவ்வியை இழந்து சோகம்
கவ்விய பாணர் தம்
யாழினை முறித்து - வாழ்வு
பாழென வெறுத்து..சிகை
பொன்மலர் போனதென
கண்மலர் கலங்கிய கதையாய்
புண்ணாகிப் போனதடி நெஞ்சு
வண்ணமயிலே ..பொன்னமுதே
வாசனை முல்லை சூடி
நேசன் எனைக் கட்டி வைத்த
கருங்கூந்தல் மயக்குதடி
மரமல்லி மரத்தினிலே
விரல் படாது வீணாய் போகுதடி - மனை
அருகே மணக்குதடி தினமுன்னை
நெருங்கி வந்து சூட
மௌவலும் மிக ஏங்குதடி
வௌவாலாய் சுற்றி மனம்
வானம் பூமி தெரியாது
கானம் மறந்த கருங்குயிலாய்
ஆனதடி ..மருதத்தான் மறுகுகிறேன்
மோனம் கலைத்து விடு - உயிர்
தானம் கொடுத்து விடு ..
“எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்” எனத் தொடங்கும் #19.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: பரணர்.
சூழல்: தன் மனை விடுத்து பரத்தையிடம் சென்ற தலைவன், மீண்டும் மனம் திருந்தி தலைவியை அணுகி அவளை சமாதானப்படுத்துகிறான். அவளோ ஊடலை விடாது சினக்கிறாள். மீண்டும் மீண்டும் சமாதானம் செய்தும் அவனை அவள் ஏற்காத நிலையில் தலைவனின் கூற்றாக வரும் பாடல். தமிழ் புலவர்களை சிறப்பாக பேணிய எவ்வி என்ற சிற்றரசன் இறந்த செய்தி கேட்டு சோர்ந்து போன பாணர்கள் தங்களுக்கு முடியில் சூடிக்கொள்ள பொன்மலர் கொடுத்து சிறப்பித்த சிற்றரசன் இறந்துபட்டானே என கலங்கி தங்கள் யாழ் எனும் இசைக்கருவிகளை முறித்து எறிந்தார் போல இவள் அன்பு இல்லாமல் என் வாழ்வு பாழாகிவிடுமோ ? எனக்கும் இவளுக்கும் உள்ள உறவுமுறை என்னாகுமோ என்று கலங்குவதாக அமைந்துள்ள பாடல்.
நன்றி (படம்) : விக்கிபீடியா
http://archives.thinakaran.lk/Vaaramanjari
நன்றி : முனைவர் பிரபாகரன்.
nallaKurunthogai.blogspot. com
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
சங்கப்பலகை
தமிழமுது கவிச்சாரல்
கவியுலக
குறிஞ்சி
சங்கத் தமிழ்
கவி அகர
அமெரிக்க தமிழகம்
"மௌவலும் " விளக்கம் தேவை..
ReplyDeleteமற்றும்
//வௌவாலாய் "சுற்றி" மனம்
வானம் பூமி தெரியாது//
இங்கே.. சுற்றி என்பற்கு பதிலாக "தொங்கி" என்று இருந்தால் .. அது தலைகீழ் தொங்குவதால் வானம் பூமி தெரியாமல் போனதற்கான சாட்சி கிடைத்து இருக்குமே.
அருமை.. ராஜி.. தொடர்ந்து எழுதுங்கள்.