குறுந்தொகை #11
ராஜாவை தேடிச் சென்ற ரோஜாவின் கதையைப் போல் மொழி தெரியாத பூமியில் சின்ன சின்ன ஆசையாய் தொடங்கிய அன்புத் தலைவனை ..தேடி செல்லும் தலைமகள்.
சங்கு வளை
சிங்காரக் கரம்
தங்காது ..தாவியோடும்
இங்குமங்கும் ..
மங்கியதோர் மதியெனவே
மங்கையவள் மாசுபடர்
தங்கமென தேம்பியழ
தேங்காத ஆறாக
பொங்கியோடும் விழியிரண்டும்
எங்கெங்கென ….
இங்குமங்கும் ...
ஏங்கியேங்கி ….
தங்குவது ..
இங்கினியில்லை …
காத்திருந்து ...காத்திருந்து….
பூத்த விழி புண்ணாகிப் போனது …
அஞ்சாதே ஆருயிரே …- .என்
நெஞ்சே ..அவனிடம் சேர்வாய்
கஞ்சன் குல்லை ..கொண்டிடும்
வஞ்சமில்லா வடுகர் பூமியிலே ..
கடு வழி ஓடியும் ….
மடு மலை தாண்டியும் …
மொழியின்றி ஏங்கியும் …
வழிபட்டு விழி சேர்ப்பேன் ..
“கோடீர் இலங்குவளை ஞெகிழ” எனத் தொடங்கும் #11.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: மாமூலனார்
பின்னணி: தலைவியைப் பிரிந்து தலைவன் தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள ஒரு நாட்டிற்குச் சென்றிருக்கிறான். அவன் வருகைக்கு காத்திருப்பதில் பயனில்லை , தலைவன் இருக்கும் இடத்திற்கே செல்வது சிறந்தது” என்று தன் உள்ளத்தின் எண்ணத்தை தலைவி வெளிப்படுத்துகிறாள்.
கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
படம் நன்றி: http://ainthamtamilsangam.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
#Rajikavithaigal
பிரிவு ஒரு துன்பம் என்றால் உயிர்
உருவி போகும் உன் பாலைப்பாதை
அருவியாக்குது என் விழிகளை - மனம்
அறுக்கும் ஊர் வார்த்தை
மறுகும் மான்விழியாள்
குறுந்தொகை 12ல்
No comments:
Post a Comment