kurunthogai#17
ஒற்றை எழுத்து கொல்லுதடி
#Rajikavithaigal
பூ எனக் கொள்வேன் எருக்கை
மா எனக் கொள்வேன் பனையை
சீ என ஊரும் தூற்ற
ஆ என அயர்வேனோ?
நீ என வாழும் என்னுயிர்
போ எனத் துரத்தலாகுமோ ?
கூ எனக் கூவும் குயிலே..!
மை எனப் பொய் தடவி - இதயப்
பை தனை தாக்கினாயே
தை அதை தையலே அன்பால்
கை சேர்ப்போம் - என்
ஐ மிளிர் அஞ்சுகமே
கோ என வாழ்ந்தேனே
தீ எனச் சுட்டாயே …
வை உன் மனதை
வா வான் போல் வாழ்வோம்
படம் (நன்றி) : wikipedia.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
குறுந்தொகை#17
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
பாடியவர்: பேரெயின் முறுவலார்
No comments:
Post a Comment