Kurunthogai_16 (version 1)_Ullor_kollo?
#Rajikavithaigal
ஒட்டகம் மேயுற ...நாட்டுப்பக்கம்
கட்டு கட்டா ….துட்டு பாக்க
துணிஞ்சு போன மச்சான்
தெனம் சிறுக்கியுந்தான்
மனம் மறுகி கெடக்கேனே
என்னய நினைச்சுத் தான்
பாப்பானோ என் ஆச மச்சான்
பனைமரம் முளைச்ச காடு
கள்ளிச்செடி நெறஞ்ச காடு - செவத்த
பல்லி சத்தம் கொடுக்கையிலே
கள்ளி உன்ன நினைப்பானே
சொல்லிகிட்டே நடந்து போனா
சுள்ளி பொறுக்குற என்
சோட்டுக்காரி.
*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)
பிரிந்த காதலனை எண்ணிக் காதலி வருந்துகிறாள். அவளுக்குத் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.
Kurunthogai_16 (version 2)
#Rajikavithaigal
விழி பேசி
வழி கண்டோம்
கிலி நீங்கி வாழ - பொற்
கிழி காண - கடு
வழி பாலை கடந்தான்
மொழி பறித்த மோகனன்
பிழியும் மனதை மறந்தானோ?
தோழி நீ செப்பிடுக !
வழிப்பறி கள்வர்
கழியுடன் அம்பை பாறையில்
செழிக்கத் தீட்டி நகத்தால்
ஒலிக்க செய்யும் ஓசையாய்
நெளிந்தோடும் செங்கால் பல்லி
களிக்கவோர் பேடை தேடியழைக்க
வலிக்குமே வஞ்சிக் கள்வனுக்கும்
உளியாய் நெஞ்சில் கள்ளிக்காட்டில்
*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)
பொருளீட்ட தன்னைப் பிரிந்த சென்ற கணவன் தன்னை எண்ணிப் பார்ப்பானோ எனக் வருந்தும் இளம்பெண்ணிற்கு , அவள் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
குறுந்தொகை#16
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.
No comments:
Post a Comment