Saturday, May 27, 2017

தேடி வந்தான் ...குறுந்தொகை #3

தேடி வந்தான் ...தெரு அடங்கிய பின்
வாடியவளின்   ..வாட்டம் தீர்க்க ..
வஞ்சியவள் காணும் முன்னே
தோழி அவனை கண்டு விட்டாள்

நோட்டம் விட்ட தோழி - ஒரு
பாட்டம் குறை கூறி
நின்றாள் தலைவியிடம் :
உன்றன் உள்ளம் கவர் கள்வன்   
நோக்கம் தெளிவில்லை - மனப்  
போக்கும்  சரியில்லை..

குறிஞ்சி பூத்த வேலியோராம்
நெருஞ்சி முள் நெஞ்சில் தைக்க
மருகி நின்றான் - மனம்
கருகி வெந்தான் ..

தாக்குதலை ஏற்ற தலைவி - பழி
நீக்க வந்தாள் ..

ஓடி மிதக்கும் பூமியை விட
கோடி முறை பெரியது

ஓங்கி உயர்ந்த வானமே
ஏங்குமளவு உயர்ந்தது

ஆழ்கடலை சிறு
நுரை குளமாக்கும்
எங்கள் நட்பு

வேலியோர
நெருஞ்சி முள்
நொறுங்கியது
குறிஞ்சி பூத்து
குலுங்கியது ..



* “நிலத்தினும் பெரிதே “ என்ற குறுந்தொகை பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதியது. ( எழுதியவர் : தேவகுலத்தார்

நன்றி:முனைவர். பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...