Saturday, May 27, 2017

சலசலக்கும் மீன் கூட்டம் ... குறுந்தொகை#9

குறுந்தொகை#9

சலசலக்கும் மீன் கூட்டம் ..
பளபளக்கும் இரு விழிகள்
குளிக்கும் தாமரை கொள்
குளிர் தடாகம்
வண்டு சூழ் சோலை
நண்டுடன் தடித்த தண்டு மலர்
கொண்ட  நெய்தல் ஊரானே !

வண்டாய்  வனம் சுற்றி
திண்டாடி வாசல் வந்தாய்
மண்மகளின் தங்கையவள்
மன்னவனின் மகவு ஈன்ற ..
பூந்தளிர் புன்னகையாள் ..
மாந்தளிர் மாநிறத்தாள் - உயிர்
காந்தம் இழந்தாள் ..- மலர்
வண்ணம் துறந்தது
மண்ணில் துடித்தது
செப்புக் குடத்து
வெப்பத்தால் வெந்தது
துடித்த மனம் துளியும்
வெடிக்கவில்லை வெளியே - உமக்கு
விடியல் வந்தது மலரால்

யாய் ஆகியளே மாஅயோளே”  என்று தொடங்கும் குறுந்தொகை பாடலை அடிப்படையாக கொண்டது.
எழுதியவர்: கயமனார்
நன்றி : என்.சொக்கன் ( பொழிப்புரை)



யாய் ஆகியளே மாஅயோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே
பாசு அடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே!

கயமனார்

திணை: நெய்தல்
சூழல்: பரத்தையிடம் சென்ற கணவன் திரும்புகிறான். வீட்டினுள் வர நினைக்கிறான். அவனுக்கு.  மனைவியின் தன்மையைஎடுத்து சொல்கிறாள் தோழி. உன்னை பிரிந்து அவள் வாடினாலும் என்றும் அதை ஊரார் அறிய வெளிப்படுத்தாமல் ..செப்பு குடத்தில் இட்ட மலர் போல வதங்கி நிறம் இழந்து போனாள். அவள் மேன்மை குணத்தாலும், உன் மேல் உள்ள உண்மையான அன்பாலும் உன்னை மறுபடி வீட்டிற்குள் வர  அனுமதி தருகிறாள்.

நன்றி:முனைவர். பிரபாகரன் 
nallakurunthogai.blogspot.com


#Rajikavithaigal

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...