Saturday, May 27, 2017

நோம்என் நெஞ்சே...நோம்என் நெஞ்சே - குறுந்தொகை#4

நோகும் இதயம் ..
பாகாய் விழியில் …
வாகாய் உன் விரல் தந்தாய்
நிதம் நெஞ்சில் - நூறு
சதம் நின்றாய் - வேறு
விதம் சென்றதேனோ ?


இன்று …
வேகும் இதயம் …
அனலாய் விழிகள்  
பொசுங்கும் இமைகள்
வசீகரா உன் விரல்கள் எங்கே? என
நோ(கு)ம் என் நெஞ்சே!
நோ(கு)ம் என் நெஞ்சே !


நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே “ எனத் தொடரும் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.

#4 குறுந்தொகை (நெய்தல் )
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்

அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.


பாடலின் பின்னணி:
தலைவனும் தலைவியும் கூடியிருந்தபொழுது, எக்காரணத்திலாவது தலைவி வருத்தமுற்று அழுதால், தலைவன் அவளுக்கு ஆறுதல் கூறி அவள் கண்ணீரைத் துடைப்பது வழக்கம். இப்பொழுது, தலைவி தலைவனைப் பிரிந்து வருந்துகிறாள். முன்பு ஆறுதலாக இருந்து, தன் கண்ணீரைத் துடைத்த தன் தலைவன் இப்பொழுது தன் அருகே இல்லாததால் தான் வருத்தப்படுவதைத் தன் தோழியிடம் தலைவி கூறுகிறாள்.


நன்றி: முனைவர்.பிரபாகரன்
Nallakurunthogai.blogspot.com


No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...