Tuesday, May 2, 2017

வெண்காந்தள் ..விரித்திருக்க - குறுந்தொகை#62


வெண்காந்தள் ..விரித்திருக்க - நறும்
புன்னகையாய் மலர்
 வெண்முல்லை மணக்க - செங்
குவளை இடையிடையே
திவலையுடன் தலை காட்ட
கொத்து மலர் கூட்டமாய்
முத்திடை பவளமாய்
 நித்தம் மகிழ்மாலையென
சித்தம் நிறை கோதையவள் ..
எத்திக்கும் மனம் போக
எத்தனிக்கவில்லையே ..
தித்திக்கும் தேன் தேடும்
புத்தியோடு வண்டாக ..



“கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை” என்ற குறுந்தொகைப் பாடலின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.
விளக்கம்: தான் விரும்பும் பெண்ணின் முகம் ஒளிபொருந்திய காந்தள் மலரைப் போலவும், அவள் கண்கள் குவளை மலர்களைப் போலவும், .அவள் பற்கள் முல்லை மலர்களைப் போலவும் அவள் மேனி மாந்தளிரைப்போலவும் இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்க்கிறான்.
நன்றி: முனைவர்.பிரபாகரன்
Nallakurunthogai.blogspot.com

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழுங்கல் ஊரே. 

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...