Saturday, May 27, 2017

மாதவன் ... குறுந்தொகை#10

குறுந்தொகை#10

மாதவன் ..மலர் தேடும்  வண்டாக  நங்கை  நிலமங்கையென  பொறுமைக்கே பெருமையாக  மணிச்சரல்கள் பாட  மயில்கள் ஆட
மகரந்தம் மாரியாய்   காஞ்சிப் பூ கமழ கமழ .. #10.குறுந்தொகைப் பாடலாக


உற்சவமும் ஊர்வலமும்
நற்செல்வம் நலம் யாவும்
கற்சிலையாம்  அவள் கரம்
பற்றியதோர் கணம் முதலே
தொற்றியதே  உன் தோளில்

முற்றாக்  கிளை  வளைக்க
முகிழ்ந்து கொத்தாய்
காஞ்சிப்பூ கமழ்ந்து வரும்
கழனியூர் கொண்டானே !

மணிச்சரல்கள் மன்றாடும்
மயிலினங்கள் நின்றாடும்.
காஞ்சியிலே தேனூறும் பூந்தாது  
நெஞ்சினிலே ஏற்று வரும்
திரளாக வண்டினங்கள்
நிரலாகும் நிலை கண்டு
முகிலெனவே களிப்புடனே


வஞ்சியவள் கிஞ்சித்தும்
வெஞ்சினமோ தான் கொள்ளாள்
விஞ்சிடுமே உன் நாணம்
நஞ்சில்லா நல்லை கண்டு ..

யாயா கியளே விழவுமுத லாட்டி” எனத் தொடங்கும் #10 குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டது.

பாடியவர்: ஓரம்போகியார்.

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.


உரை: தலைவன் செல்வம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் காரணமாக இருப்பவள் தலைவி. தலைவனின் ஊரில் மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்கள் உள்ளன. அந்த மரங்களின் கிளைகளை உழவர்கள் வளைத்தால், பயற்றின் கொத்தைப்போல் இருக்கும் பூங்கொத்துக்களில் உள்ள பசுமையான பூந்தாதுகள் அவர்கள் மேல் படும்படி விழுகின்றன. அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள்.

படம் நன்றி: http://ainthamtamilsangam.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


#Rajikavithaigal

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...