நாளென்ன..கோளென்ன ..நாரணனுக்கு
நாளும் கோளும் நரனுக்கே அன்றோ
நாளும் கோளும் நரனுக்கே அன்றோ
காலத்தை கடந்த கண்ணனன்றோ - அவன்
ஜாலத்தை நடத்தும் மன்னன்னன்றோ..
ஜாலத்தை நடத்தும் மன்னன்னன்றோ..
நொடியும்..நாளும் பொழுதும் நாயகனுக்கேது?
நாமன்றோ ஏற்றி வைத்தோம்.
நாமன்றோ ஏற்றி வைத்தோம்.
'அச்' என்று தும்மும் 'அக்கணமே'
'அச்சுதன்' அமர்ந்திருக்கும்..'ஆ'லயமே.(ஆ+லயம்)
'அச்சுதன்' அமர்ந்திருக்கும்..'ஆ'லயமே.(ஆ+லயம்)
# எண்ணத் தூண்டுதலுக்கு நன்றி : சுமித்ரா ராம்ஜி
No comments:
Post a Comment