Thursday, May 4, 2017

அவன்..அவள்..அது.

அச்சுதன் ...
அவன்..அவள்..அது..
இங்குண்டு ..அங்குண்டு ..எங்குமுண்டு ..
சங்குண்டு ..தடக்கையில் சக்கரமுண்டு
மங்காப்புகழுண்டு மாறாக் காதலுண்டு
ஐம்பூதம் அவனே அவனே ..
வானம் நினைத்து நின்ற வாமனனாய்
பூமி அணைத்து நின்ற வராகனாய்
கஜகுரலுக்கு கடுகி வந்த காற்றாய்
ஊழிக் காலத்தில் உத்தமனாய்
வாழி வாழி என வாழ்ந்த ஞாயிறு தோன்றலாய்
அவனில்லா இடமில்லை ..
அவனில்லா பொருளில்லை
அறிவும் அவனே - பொருட்
செறிவும் அவனே!
அவன் என்பவர்க்கு அவன்..
அவள் என்பவர்க்கு அவள்...
அது என்பவர்க்கு அது...
அவன் ....அவள்... அது...

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...