நீலக்கடலில் நெற்றி சுட்டியாய்
கோல மரகத குளிர்வனம்
காலத்தால் மெல்ல
நீலக்கடல் புக ஆயத்தமாய்
விடையறியாமல் விஞ்ஞானம்
மௌரிஷியஸ் நாட்டின் கதையிது
மொத்த பூமி அறியும் நிலையிது
காட்டு வாத்தினமே
நாட்டின் காவல் தெய்வமென அறியா
மடமை நிறை மாந்தர்காள்
டோடோ பறவையினம் அழிக்க
நூறாண்டு ஓட்டத்தில்
மண்ணரிப்பை
தன்னிருப்பால் தவிர்த்த
மர வகையொன்று பெருகாது
வனதேசம் வசந்தமிழக்க
மனக்கிலேசம் மிகுந்ததுவே
சொந்த மண்ணில் துளிர்க்காது மரம்
நொந்தமைக்கு
குறுக்கு விசாரணை
முறுக்கியது விஞ்ஞானம் - தன்
சீரண அமிலத்தினால் - விதையினை
சீரான பதம் செய்த
அரும்பறவை
திரும்ப வந்தாலன்றோ
அரும்புவேன் விதை செய்த
விந்தை இயற்கையன்றோ ?
ஓ மனிதா
ஓரேயோரு முறை புன்னகை கொடு
ஓராயிரம் நிறைமழை காண்பாய் ...
குறிப்பு:
மௌரிஷியஸ் - நாட்டின் பெயர்.
டோடோ பறவை - பெயர்ச்சொல்
இது ஒரு உண்மை (விஞ்ஞான) நிகழ்வு. டோடோ வாத்து இனமே மனிதனால் அழிக்கப்பட்டு விட்டது. அதன் வயிற்றில் சுரக்கும் ஒரு வகை அமிலசுரப்பு மட்டுமே ஓர் குறிப்பிட்ட வகை கனிகளின் கொட்டையில் உள்ள கடின பகுதிகளை அகற்றி அவை முளைத்து பெருக வழி வகுக்கும். அந்த மரங்கள் பெருகாமல் அழிந்து போனதால் , மண்ணரிப்பு ஏற்பட்டு மௌரிஷியஸ் நாடு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வருவதாக அறிவியல் உலகம் தெரிவிக்கிறது. மௌரிஷியஸ் இந்திய பெருங்கடலில் உள்ள ஓர் தீவு நாடாகும்.
No comments:
Post a Comment