Thursday, May 4, 2017

ஹைக்கூ - இயற்கை

தமிழமுது கவிச்சாரல் (17-11-2016)


ஹைக்கூ போட்டி


#1(won the prize)
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் கண்டோம் /
மலை காடு வயல் கடல் முறைமை திரித்தோம் /
அடுக்குமாடியுலகு


#2
மலை வெட்டினான் துகளாக்கினான்
துகள் ஒட்டி மலையாக்க கூடுமா?
அறியாமை.


#3
பூமிப்பெண்ணுக்கு பூரிப்பு தாங்கவில்லை
புதிதாய் ஓர் அழகு நிலையம் கண்டாள்
இயற்கை விவசாயம்

#4
காடு  வெட்டிக்  களைத்தான்
ஓய்வெடுக்க நிழல் தேட  

வெம்மை

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...