Thursday, May 4, 2017

அய்யாசாமியும் ஆயாவும் (சென்னை பாஷையில்)

ஐய்யாசாமி அன்னாடம்
ஆரஞ்சு பழம் வாங்குவான்
அண்ணா சிலையாண்ட
அஞ்சலை ஆயாவாண்ட.

இன்னாமே இப்டி புய்க்கிதுன்னு
நீயே துன்னு பாருமே னு
அதுங்கையில் ஒரு பயத்த
அப்பிடிக்கா குடுக்கோசொல்ல
என்னப்பா இப்பிடி
டபாய்கிற கல்கண்டா
தித்திப்பா கீதேப்பா
கெய்வு பாவம் கலங்குவா.

இன்னாத்துக்கு..இந்த பாவம்
அன்னாடம் ஆயாகிட்ட
ராங்கு காட்டுற..
அது பாவம் அத்தினியும்
அஸ்கா சீனியா தான் வச்சுருக்கு
அய்யாச்சாமி வூட்டம்மா
பங்கஜமும் அங்கலாய்ச்சா.

அய்ய..நீ சும்மா கெடமே
ஆயா..விக்கிறாளே மகராசி
ஆனாக்க..ஆசையாத்தான்
அத்தனூண்டு ஆரஞ்சு
அது வாயில் போடாது.
போட்டாலும் கட்டுப்படி யாவாது.

அதுங்காட்டி தான் அன்னாடம்
ஆரஞ்சு அத்தினி புய்க்கிதுன்னு
ஒத்த பயம் ஆயாக்கு கணக்கு
வச்சு ஓவராத் தான் புளுகி வாரேன்.

அந்த பய அய்யாசாமி
அன்னாடம் ரவுசு பன்றான்
நீயாங்காட்டியும்..
சளைக்காம..சல்லிசா
சுளையா ரெண்டு பயம்
போட்டு தார..
தள்ளுவண்டி தனசேகர் - உனக்கு
கணக்குஓன்னும் தெரியல
எனக்கொன்னும் புரியல
தனக்குத்தான் புலம்பி தள்ள

போடா பொறம்போக்கு
புரியாத பய.டா..நீ
நான் திங்க மாட்டேன்னு
அன்னாடம் ஒரு பயத்தை
கசக்குது புய்க்கிது னு
கடாசிட்டு போராண்ட..
அய்யாசாமி ..அவன் பாசம்
அது தெரிஞ்சி தராசு முள்ளு
தடுமாறி எட கூடுதுடா என் ராசா.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...