Thursday, May 4, 2017

குற்றாலத்து குயிலு நான் - version2 kurunthogai #46

version#2 kurunthogai 46
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன


குத்தாலத்து குயிலு  
வெத்தாளா நிக்கேனே
பட்டாளத்துக்கு போன மச்சான்
போட்ட  கடுதாசி பாக்க

பட்ட மரமா நிக்கும் குயிலு

தோட்டத்து பக்கம் நின்னு
நோட்டம்  நல்லா பாத்து கிட்டு
பக்கத்து முத்தத்துல
பக்குவமா அரிசி கொத்தும்
சிட்டுக் குருவிக் கூட்டம்

வட்டமா வகை வகையா
ஆட்டம் போட்டு
பட்டமா பறந்து போச்சே - வேற
தோட்டம் பார்க்க


சாயங்கால சந்தி நேரம்
ஆயாசமா கூடு வந்து
ஆனந்தமா கதைய பேசும்
ஆனா அந்த பட்டாளத்து
பக்கம் மட்டும் யாருமில்லா
காட்டுப்பக்கம் குருவி
கூட்டம் என்ன இல்லாமலா
போயிருக்கும் ...பொல்லாப்பு
ஆயிருமே ...நானும் இதை
கேட்டுபுட்டா ..
#Rajikavithaigal


“ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன” என்று தொடங்கும் குறுந்தொகை பாடலை அடிப்படையாக கொண்டு எழுதியது


பாடியவர்: மாமலாடனார்.


ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்
தெருவின் நுண் தாது குடைவன ஆடி
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே.


திணை: மருதம்

நன்றி: என்.சொக்கன்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...