மலர்த் தூவி..
கரம் கூப்பி..
சிரம் தாழ்த்தி..நின்றாய் - நொடி இரண்டில்
வரமாகி வலமாக வந்தாய் - அரங்கை
வரமாக்கி வலமாக வந்தாய்.
நீ தாழ்த்தினாய்..சிரம்
நீ கூப்பினாய் ..கரம்..
யாம் பெற்றோம் வரம்
பரதம் எனும் வரம்.
நாட்டிய கணபதியை கூட்டி வந்து
நாட்டையுடன் கூட்டமைத்து - ராஜ
பாட்டை அமைத்தாய்.
தத்தை நீ ஜதி ஆட...
அத்தை தன் கதி மறந்தார்.
தாத்தாவோ அத்தனையும் தான் நிறைந்தார்.
வர்ணம் என்று தொடங்கி வைத்தாய்
வர்ண ஜாலமன்றோ நடத்திவிட்டாய்.
சொர்ணமால்யாவாய் தோன்றினாய்
சொர்ணமுகியாயும் மாறினாய்.
காற்றினிலே..கீதம் ..மட்டுமா கண்டோம்?
காவியம் கண்டோம் - ஓர் உயிர்
ஓவியம் கண்டோம் - பதமாடும் உயிர்
ஓவியம் கண்டோம்.
வள்ளிக் குறத்தியாய் வந்தாய்
குமரன் நெஞ்சை கொஞ்சம்
அள்ளிச் செல்லவே - ஓர்
வள்ளிக் குறத்தியாய் வந்தாய்
உள்ளமனைத்தையும் ஓர்க் கூடையில்
தள்ளிச் சென்று விட்டாய்.
பள்ளி மாணவியோ நீ? - அடிக்
கள்ளி ..நீ. கவந்துவிட்டாய்.
உள்ளம் கவர்க் கள்ளியடி நீ.
பவானிதனை குருவாய்ப் பெற்றாய்.
பவனி புகழ் பரதம் கற்றாய் - பேருடன்
அவனியிலே பவனி வருவாய் ஐயமில்லை யாருக்குமிங்கே.
ஷம்முவிற்கு பெருமை மிக சேர்த்திடவே
ஜம்மென்று ஆடி ஜமாய்த்துவிட்டாய் - அன்னை
உமாவின் புகழுக்கோர்
காமாவாகிப் போனாய்.
வாழிய செந்தமிழ் ..ஓங்குக உன் புகழ்.
No comments:
Post a Comment