Thursday, May 4, 2017

உள்ளங்காலை உலகிற்கே தான் காட்டி...


முழு நிலவென முகம் காட்டினேன்
முயலவில்லை முன்னே வர

திண்ணென தோள்  காட்டினேன்
தெளிவில்லை தேடிச் சேர ..

நாபிக்கமலம் காட்டி நின்றேன்..
கற்ற வித்தை அனைத்தையும்
கடந்தவன் நான் என்று
நாட்டமில்லை நாடி வர

கற்றூண் என
காலிரண்டை கண்டனையோ
கதறித் தான் கேட்டுவிட்டேன்
கவலையில்லை தானுனக்கு.

பாதமே மேற்புரம் காட்டி
பரிதவித்தேன் பார்ப்பாரில்லை

உள்ளதே போதும் என
உள்ளம்தான் வெதும்பி ..
உள்ளங்காலை உலகிற்கே தான் காட்டி
ஊர்ந்தே நான் செல்கின்றேன் ..
உடனே நீ வந்துவிடு

உனக்காக காத்திருப்பேன்
ஒரு நூறு யுகம்தானே ..

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...