Thursday, May 4, 2017

Dr. Abdhul Kalam

கனவுகளுக்கு ஓர் ..
உன்னதம் தந்தீர்
விஞ்ஞானி என்றோம் ..
மெய்ஞ்ஞானமும்  தந்தீர்
விஞ்ஞானி என்பதால் தான்
விழித்துக் கொண்டே  
கனவு காணும் கலை சொன்னீரோ?
மெய்ஞ்ஞானி என்பதால் தான்
பொய் மதப் பித்தர்களும்
வாய் மூடி உமை வணங்கினாரோ?


அக்னி சிறகு தந்தீர் …..- மக்களின்
அக்னி வெளிக் கொணர்ந்தீர்
ஓவியராய் ஓர் முகம் ..
ஓவியமாய் தேசம் தீட்ட புறப்பட்டீர்
இசைக்கும் உம் விரல்கள் வீணையினை
இசைபட வாழ்தல் போதித்தீர்
கவிஞரானீர் ...கருத்துயர்த்தி
புவி உம் வசமாக்கினீர் ..

மங்குணி ஆட்டத்தில்
எங்கினி நல்ல தலைமை
ஏங்கிய நேரத்தில் ..
ஓங்கிய கதிராய் உதித்தீர்


எளிமைக்கோர் எடுத்துக்காட்டாய் ..- மன வலிமைக்கோர் வாழ்ந்த உத்தமராய்
நலிவுற்ற நாட்டிற்கு
செழிப்பென வந்தீர் - இதயத்
துடிப்பெனத் திகழ்ந்தீர் …- அறிவு
வெடிப்பென மாணவச்
செடிக்கெனவோர் இடம் - உம்
துடித்த நல் இதயத்தில்
இறப்பவர்க்குத் தானே அஞ்சலி - மக்கள் உளம்
நிறைப்பவர்க்கேது அஞ்சலி


உம் கனவுகள் ..
மெய்ப்பட கைகளை இணைத்திடுவோம் ..
பொய் முகமூடிகளை கழற்றிடுவோம் …
வாய்ச்சொல் வீரத்தை விரட்டிடுவோம் …
செயலினில் இறங்கிடுவோம் ..

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...