Thursday, May 4, 2017

நீதி தேவதை...பாதி விழித்து




காட்சிகளை கண்ணுற்றால்
சாட்சிகள் பின்னமுறுமென
கன்னங்கரிய விழிதன்னை
சின்னதொரு கருந்துணியால்
முன்னம் நீ மூடி விட்டாய் ..
மின்னலென கண்ணைப்
பறிக்கும் வெள்ளிக்காசுகளோ
தெறிக்க செய்ததுவே
நீதி தேவதை உன் துலாக்கோலை
பாதி கண் விழித்து ..நீ
சதி செய்யவும் - சட்டத்தின்
விதி தொய்யவும் ..நாட்டின்
கதி மாறவும் ..மாயங்கள் பலவாக  
மதி மறைய .. நியாயங்கள்
மடுவினிலே மரணிக்கும்
நடுவினிலே பாமரனோ  - காலக்
கெடுவின்றி கிடப்பினிலே

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...