Thursday, May 4, 2017

தேய்பிறை நிலவாய் நீ ...


தேய்பிறை நிலவாய் நீ
சாய்ந்திடு என் தோளில்
தேய்ந்த நிலவை நான்
பௌர்ணமியாக்குவேன்  
பத்திரமாய் இதயம் சேர்ப்பேன்
நித்தியமாய் நெஞ்சில் சுமப்பேன்
சத்தியமாய் சாகசங்கள் செய்வோம்
காத்திருப்பு ஏதற்கடி ?  
தோத்திரங்கள் தோற்றாலும்
சாத்திரங்கள் சாய்த்தாலும்
எத்திறனும் கற்றிடுவோம் என் காலில்
பத்திரமாய் சுற்றிடுவோம்  - இப்போதே
காத்திரமாய் உன் கரங்கள் என்
பாத்திரமாய் ஏற்று விட்டேன்.
ஓருயிர் ஈருடல் சோதனையோ ?
ஓருயிர் ஒன்றரை உடல் சாதனையை
பாரினில் செய்திடுவோம்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...