Thursday, May 4, 2017

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்

இளையர் தம் ஓர்மை சீர்மை
கலையாத நற்பண்பு என்றும்
தொலையாத நிதியமென  
நிலை கண்டு ஈன்ற பொழுதும்
பெரிதுவக்கும் தாயுள்ளங்களும்
பெருமை மிகு சான்றோன் எனக்
கேட்ட தந்தையரும்
போற்றி நிற்கின்றோம்

நாட்டு மாடுகள் வழியாய் நம்
வீட்டு கன்று குட்டிகளின்
நயம் கண்டு நாட்தோறும்
வியந்து நிற்கின்றோம்
காலத்தின் கலங்கரை விளக்குகளாம்
ஞாலத்தின் எதிர்கால நம்பிக்கை
நட்சத்திரங்கள்...இவர்கள்
அச்சமில்லை…. அறம் வாழும்
மிச்ச காலம் பூமியிலே

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...