என்று தணியுமோ இந்த சாதி…
என்று தணியுமோ இந்த சாதி…
நின்று நிலைக்குதே அநீதி
வள்ளுவம் சொன்னது நல்
தெள்ளு தமிழில் நாம்
அள்ளிப் பருகவில்லையே ..
இட்டார் பெரியோர் .உலகில் இழி
பட்டார் சிறியோராய் இடாதார்
அவ்வை செப்புமொழி ..செவியில்
கொவ்வைப் பழமாய் கொள்ளவில்லையே
சாதிகள் இல்லையடி பாப்பா - தலை
மோதி மோதி கதறினானே நம்
முண்டாசுக் கவி பாரதி - அதை
வீண்பேச்சு என விட்டோமே?
பாரதியை புறம் தள்ளி - உடன்
பாரதியின் தாசனையும் துணைக்கு அனுப்பி
பட்டுக்கோட்டையாரை சிகரமேற்றி பின்
விட்டு தள்ளி மறந்திட்டு ..
சாதி மட்டும் சாட்சியாக நிற்குது இன்றும்
மீதி சொல்லெல்லாம் பறக்குது காற்றிலே
தேதி கிழமை நாளு மாறும்
வீதியோரம் பெருகும் சாதிசங்கம் ஓயுமா?
சுவாதிகளோ ..மீளா உறக்கத்தில் ..
சாதிகளோ ..தாளா .மயக்கத்தில்
No comments:
Post a Comment