உள்ளமதில் ஊனம் ..
தெள்ளமுது ..ஞானம்
எள்ளளவு இருப்பினும் விள்ளல் இரா உள்ளமதில்.
கள்ளமது உள்ளத்தில் கறையாக
அள்ளிப் பூசிவிட
தள்ளி ஓடிடுமே
அள்ள அள்ளக் குறையாப்
பிள்ளைக் குணமாம் அன்புமே !
சள்ளையென மக்களைத்
தள்ளிடாதே என்றுமே
அள்ளித் தந்த ஆண்டவனுக்கு
முல்லை மணத்துடனே
நன்றிதனை நெஞ்சார தந்து விடு
நன்றாகவே நடப்பவை அமைந்திடுமே.
நடந்தேறிய செயல்களுக்கு - நீயே
திடமாக எதிர்த்து நின்று
பொறுப்பேற்றுவிடு ..
வெறுப்பாக விரல்
நீட்டி வீண்பழி ஏற்றாதே
ஏட்டிக்குப் போட்டியாய்
உடனுறை உறவுகளின் மீது.
கெடல் நேரும் பொழுது
உடல் பொருள் ஆவி
கொடுக்கவும் உயிராய்
துடிக்கவும் இருப்பதும்
உற்றமும் ..நல்
சுற்றமுமே ..
உள்ளமெனும்
உள்ளொளியின் ..
உயர்வு உணர்ந்து விடு - கீழ்
பள்ளமென கருதினால்
வெள்ளமென வேண்டாதன
விரைந்து புகுந்திடுமே.
No comments:
Post a Comment