# 1 அற்புதங்கள்
********************
அற்புதங்கள்
அனைத்தையும்
அழகான கவிதையாக்க முடியாது
அதில் ஒன்று பனிப்பொழிவு
இன்னொன்று காதல்
#2 மை தீட்டும் நேரம்
******************************
மை தீட்டும் நேரம் ..உன் விழிக்கு
சாயம் தீட்டினாயா ?... இல்லை
மாயம் தீட்டினாயோ ..
காயப்பட்ட இதயம்
ஓயாமல் உன் விழி
மோதவே விரும்புதே?
#3 நிறம் மாறும் மரங்கள்
************************************
நீ சாய்ந்து நின்ற பக்கத்தில்
நிறம் மாறிய இலைகள் ..
இளம்சிவப்பாய் ..செம்மையாய்
உன் கன்னத்தின் கதிர் வீச்சோ?
#4 என்ன நான் செய்ய வேண்டும்?
********************************************
உன்னை கவிதையாக்க ..
வண்ண வண்ண
வார்த்தைகள் கோர்த்து
தோற்றுவிட்டேனடி
ஏற்றுக்கொண்டது உலகம்
என்னை கவிஞனாக
உன்னை நான் கவிதையாக்க
என்ன நான் செய்ய வேண்டும்?
# 5 பனிப்பாலைவனத்தில் ..
*********************************
பனி படர்ந்த பாலைவன சோலையிலே
தனித்த .கருநாக சாலையிலே ..
இனிய இசையோடு பயணம்
மணித்துளிகள் நகரவில்லை
இணைந்த இதயங்கள்
#6 வசந்தமாக நீ
****************************
வாரியிறைத்த
வண்ணமலர்
கூட்டமாய்
வசந்தமாய்
நீ என் வாழ்வில் வந்தாய் …
சிறு கோபம் காட்டி
வேனிற்காலம் காட்டினாய் ..
விலகி ஓடினாய் ..
இலையுதிர் காலமாய் நான் ..
உறைய வைக்காதே - குளிர்
நிறை பனிக்காலமாய் ..
# 7 கீற்றிடை..மின்னல்..
***************************
தென்னங்கீற்றிடை ..
மின்னல்……. உன்கண்கள்.
சன்னக் காற்றிடை ….தென்றல் உன்
ஜன்னல் நோக்கையிலே …
#8 கண்ணாமூச்சி
*********************************
கணினி முன் ..
கனிந்து ஓடி வரும் கவிதை - உன்
கண்கள் முன்
கண்ணாமூச்சி ஆடுவது ஏன் ?
No comments:
Post a Comment