Thursday, May 4, 2017

கங்கை மைந்தன் கரை சேர்ந்துவிட்டார்

கங்கை மைந்தன் கரை சேர்ந்துவிட்டார்
நம்கை எல்லாம் எப்போது பிறவி
பெருங்கடல் நீந்தி கடக்குமோ?
பெருங்கடல் பெம்மான் தான்
சுருங்கிட விடைதருதல் வேண்டும்.


அரும்பிடும் ஆசைகள் ஆயிரம் கோடி
விரும்பிடும் வித்தைகள் வித விதமாய் - ஆசை
அரும்புமிடத்தில் விரும்பி அழித்திட்டால்
திரும்பி வந்துழல வேண்டுவதில்லை
கரும்புச் சாறாய் கவிமொழியில் கற்றாலும்
இரும்பு மனம் இலகுவாய் இளகுவதில்லை .
கரும்புகையாய் கருமம் கண்மறைத்து
விரும்பும் வண்ணம் வினை மிக செய்திடுதே.
எறும்பூர கல் தேயும்போல் கல்மனதில்
விரும்பி விரும்பி அவன் நாமமேற்ற

திருந்தியோர் மனமாற்றம் வருமோ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...