கண்ணீர் துடைத்து
கருவிழியால் எனை ஈர்த்து
காந்தப் பார்வை
காந்தப் பார்வை
காட்டிய கானகக் குயிலே…
கசிந்துருக்கும் இசையாலே ..
காயப்பட்ட மனதிற்கு - புது
சாயமிட்டாய் ...செங்காந்தள் விரலாலே
மாயமாய் மாற்றினாயே
ஓய்ந்து போன என் உள்ளமதை
கண்ணில் வழிந்த நீரை
வண்ணக் கோலமாய் உன்
சின்ன விரல் கொண்டு
என்னவென்று கேட்டுவிட்டாய்
மன்னவன் என மாற்றிவிட்டாய்
No comments:
Post a Comment