அன்னையவளே பெருங்கொடையன்றோ ..
மண்ணுலகில் பெற்றதெல்லாம் - வெறும்
மண்ணெனவே துச்சமாய்
எண்ணிடுவர் துறவுடையோர்
அம்மகானும் புறந்தள்ளார்
அம்மையெனும் பெருங்கொடையை
பட்டினத்தார் விட்டுதறி
கட்டியதோர் துண்டுடனே துறவு
கொண்டார் …..அன்னையிழந்து
விண்டு நின்றார் உளமுருகி
முன்னையிட்ட தீக்கடனை
பின்னையிட வந்திட்டார்
அண்ணல் நபிகள்
அன்னை காலடி சொர்க்கம் கண்டார்
தோளேந்தி வளர்த்தவளின்
பால் கடனை அடைக்கலாகாதென்றார்
அத்துவைத தத்துவத்தை அகிலத்தில்
வித்தையாக்கிய சங்கரனார்
எத்தனையோ கரை கண்டும்
சத்தியமாய் வந்திட்டார் அன்னை உடலெரிக்க
பத்திரமாய் பெற்ற குழவிதனை
சித்திரத்தை சிதைத்திங்கு
குப்பைத் தொட்டி சேர்த்த
தப்பாத உத்தமியே
எப்படித்தான் இவ்வினையை
அழிப்பாயோ யாமறியோம் -உயிர்
அளித்த கோமானும்
பழியுடையோன் தானென்றும்
தாயோ பேயானது
நாயோ தாயானது
சேயோ ..?
குப்பைத் தொட்டி
தத்துக்கொடுத்த
பிள்ளை நான்..
No comments:
Post a Comment