Thursday, May 4, 2017

நானுண்டு தேனுண்டு நினைவெதற்கு?

பால்கனித் தொட்டியிலே
பறக்கும் ஓர் பூவாக
பலவண்ண தேன் சிட்டு.

தேன் எடுப்பதே
தெய்வீகச் செயலாக.
தெற்கும் இல்லை
வடக்கும் இல்லை
கருமமே கண்ணாக

குட்டிக் குருவி எனக்கென
விட்டுச் சென்ற செய்தியுண்டு.

தேன்..குடி..தேன்..மட்டும் குடி
தேன் குடிக்கும் போது தேன் மட்டும் குடி.
தெற்கும் இல்லை வடக்கும் இல்லை.
தேன் குடி தேனாக மாறிவிடு.
தெவிட்டாமல் ஆகிவிடும் உன் வாழ்வு.

ஓர்மையுடன் ஓர் செயலால்
கூர்மையாக ஆகிவிடும் உன் அறிவு.

ஒருமை தெரியும் இருமை மறையும்.

நானுண்டு தேனுண்டு.
நடுவினிலே நினைவெதற்கு?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...