Thursday, May 4, 2017

அரிசியிலும் போலி..

அரிசியிலும் போலியை வைத்தான் சீனன்

அரிசியிலும் போலியை வைத்தான் சீனன்
சரித்திடவே ஓர் நாட்டின்
அரசியலை …….உணவினிலே
சரியாய் சதியொன்றை செய்திட்டான் .

கரிசனமாய் விலையதனை
சரி சமமாய் குறைத்திட்டு  
வரிசையாய் வாணிபம்
பெருக்கிட்டான்.
சீரிய பொருட்களை - அவன்
கூறிய விலைக்கு வாங்க முடியுமா ?
யாரிடமும் கேள்வி கிளம்பியதா?

வேறிடம் பிறந்த பொருட்களே
அரிதென ஆடம்பர
அரிதாரத்தை அமைப்பாக - சீன
பெருநாட்டுக்காரன் தன்னுயர்வுக்கு
உருமாற்றி கொண்டான்

மோனத்தில் முத்தெடுத்து
ஞானத்தை பெற்றெடுத்த பாரதம்
ஏனமேந்தி மானங்கெட
சிலரின் சுயநலமும்
பலரின் பகுத்தறிவில்லா
பண்பும் தான் காரணமே

தன் மேன்மை தான் மறந்தால்
எந்நாளும் உயர்வில்லை
யானை கட்டி போரடித்த நாட்டில்
பூனை அடுப்பில் உறங்கியதேன்? - அரிசி
பானை நிரப்பிய அன்பானவனை  
அகதியாக்கியதால் இன்று நாம்

சகதியாய் போலி அரிசி பொருளாதாரத்தில்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...