#அக்ஷய த்ரிதியை ஆர்ப்பாட்டம்
வைணவம்
தையலை
வைத்த இடம்
வைத்த மாநிதியின் இதயம்
சைவம் ..
கைத்தலம் பற்றிய
பைங்கிளிக்கு
மெய்யில் பாதியை
மொய்யாய் கொடுத்தது
பை நிரப்பும் அருள் மட்டுமல்ல
வையகத்தீர்..
மையல் நிறை மகாலட்சுமியும்
மெய் வாய் எண்ணமதில்
பொய்யகற்றி - நறு
நெய்யாக நமை மாற்றும் மங்கையவள்..
#2
#அக்ஷய த்ரிதியை ஆர்ப்பாட்டம்
பக்கென இருக்கும் நகை என்ற
ஈரெழுத்து சொல்லை
நாவழுத்தி சொல்லுமுன்னே நம்
நாயக பெருமான்களுக்கு
#3
#அக்ஷய த்ரிதியை ஆர்ப்பாட்டம்
நகைமுகன்
பகைமுகனாய்
சிகை பிய்த்து திரிவர்
வகை தெரியா மகிழ்வில்
நகை வந்த களிப்பில்
மிகை நட்பாய் வாழ்துணை
#4
#அக்ஷய த்ரிதியை ஆர்ப்பாட்டம்
லேசாய் சொன்னால்
லூஸ் மோகன்
அழுத்திச் சொன்னால்
அந்நியன்
அக்ஷய திரியை அன்று
ஆண்களின்
அவதானிப்புகள் ..
No comments:
Post a Comment