Thursday, May 4, 2017

நிலம் மீட்போம்...


மலை தாண்டி
மண் புகுந்து
கடியதொரு காடு அலைந்து
மருதமெனும் விளை நிலம் தந்த
மூத்த குடி நாமன்றோ ?
நாகரீகத்தின் தலையன்றோ
விதையிழந்து வீணாய்
வீழ்ந்த கதையென்ன?
நிலமகளின் நிலை தாழ்த்தி
நிர்கதியான கதையென்ன?
நிலம் மீட்போம் - இயற்கை
வளம் காப்போம் !

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...