Thursday, May 4, 2017

ஹைக்கூ ( மணல் சிற்பம்)

ஹைக்கூ போட்டி ( மணல் சிற்பம்)
19-10-2016
#1
கடலோரக் காத்திருப்பு
சிலையானாள்
மணல் மங்கை ..


#2
கடற்கரையில்
கவிதை உலா..
மணல் சிற்பம்


#3
சரிகை பாவாடை...
ஒலிக்காத மணிக்கொலுசு ..
மணல் சிற்பியின் கைவண்ணம்

#4
மண்ணிலேயே …
எந்நேரம் விளையாடாதே
மணல் சிற்பியின் தாய்


#5
கரை கடந்து ஓடி வரும்
அலைமகள்

மண் மகள் எழில் காண

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...