Thursday, May 4, 2017

குழந்தைத் தொழிலாளி குறுங்கவிதை

ஆண்டு விழா மலர் போட்டிகள் - ஐந்தாம் வாரம்
குறுங்கவிதை

முதிர்ச்சியில்லா முயற்சியடா -இளம்
முதுகெலும்பை முறிக்குதடா- என்
முள்ளில்லா ரோசாவே …
கள்ளமில்லா ராசாவே ..
பிள்ளை நிலா உன்னை
தள்ளியதார் தெருவிலே?

மின்மினி கனவினிலே
தன்னையே இழந்தனரோ
கண்மணியை பெற்றவரே ?
நினைவதில் நிம்மதியின்றி  - நடை
பிணமாய் நாட்கள்
நகர்த்தும் நகரத்து
நடுத்தெருவாசியின்
கடைக்குட்டியோ நீ?

விடை கொடுத்து வறுமை
விரட்ட தள்ளு வண்டி
உருட்ட வந்தாயோ?

கவிதை ஆக்கம்: ராஜி வாஞ்சி

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...