Thursday, May 4, 2017

ஆதவன் ரேடியோ புதுவருடக் கவிதை 2017

எதிர்பார்ப்புடன் புது வருடம் …..
********************************************
இலவு காத்த கிளியாய்
களவு போன காலங்கள்
காலண்டரின் கடைசி சில
காகிதங்களாய் ...படபடக்க
தாளமில்லா பாடலாய்
தடுமாறிய பாடங்கள் . ..
போனது போகட்டும்

தேனாய் தித்திப்பாய்
ஆனதொரு ஆண்டு
புதிதாய் பிறக்க - நல்
விதியாய் வீசுதிங்கே
மதியால் உயர்ந்து  - பெறு  
நிதியாய்  உயர்
கதியை கொண்டு
உதித்திடுவோம் - பெயர்
பதித்திடுவோம் ..
புதியதோர் உலகு காண்போம்
புதியதோர் ஆண்டினிலே ..

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...