Tuesday, May 9, 2017

பிரியா நண்பினர் ..#302.குறுந்தொகை

பிரியா நண்பினர்
அரிய இருவரும் எனும்
அலருக்கஞ்சி மனம்
உலர்ந்தானோ
களர் மலை நாட்டினன்


தளர் வளை தவிக்கக்  கண்டோம்
வளர் உயிர் உருக நின்றோம்


பலர் உறங்கும் நடு
யாமத்தில் என் நினைவில்
சாமந்தியாய் பூக்கிறானே


அய்யோ என் தோழி
செய்வதறியேன் ..செவ்விழி
காண வாரானோ - என்னுயிர்
பேண வாரானோ ?


உரைத்திசின் தோழியது “ என்ற 302 ஆவது குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


பாடியவர்: மாங்குடி கிழார்


தலைவனின் பிரிவினால் உண்டாகிய துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறந்து போகலாம் என்றால், அதற்கும் அச்சமாக இருக்கிறது. ஊரார் எங்கள் இருவரையும் பற்றிப் பழிச்சொற்கள் பேசுவதால், தலைவன் என்னை நேரில் காண வருவதற்கு அஞ்சுகிறான் என்று நினைக்கிறேன். அவன் என் நினைவிலே மட்டும் வருகிறான்.” என்று தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.


#302.குறுந்தொகை
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்றலைப்
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே.
திணை: குறிஞ்சி.


நன்றி:முனைவர்.பிரபாகரன்

nallakurunthogai.blogspot.com

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...